Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து 8 பேர் பலி!

 

மும்பை கட்டட விபத்து

மும்பையில் கட்கோபர் பகுதியிலுள்ள  நான்கு மாடி கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கட்டடத்தில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டடத்தின் உரிமையாளரும் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான சுனில் சிதாப் என்பவர்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், ”இந்தக்  கட்டடத்தின் கீழ்த்தளத்திலுள்ள நர்சிங் ஹோமில் கட்டட மறுசீரமைப்பு வேலை நடந்துகொண்டிருந்தது. இந்த  நர்சிங் ஹோம் சுனில் சிதாப்பிற்குச் சொந்தமானது. இந்தப் பணியால் சுற்றியிருக்கும் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.  இதுகுறித்து நாங்கள் முன் தினம் ஒரு கூட்டமும் நடத்தினோம். ஆனால், மறுநாளே இப்படியாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார். 

இந்தக்  கட்டட இடிபாடுக்கான காரணத்தை மும்பை மாநகராட்சி இன்னும் உறுதிசெய்யவில்லை. “இந்தச் சம்பவம் தொடர்பாக  நாங்கள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை  எடுப்போம்” என்று மும்பை மேயர் விஷ்வாநாத் மஹாதேஷ்வர் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close