Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலைக்காக வெளியூர் செல்வதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!: ஆய்வு

பெண்கள்

படிப்பு மற்றும் வேலைக்காக வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த  2001-ம் ஆண்டு முதல்  2011-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண்கள் வேலை காரணமாக வெளியூர் செல்வது 101% அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதேபோல் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை 48.7 சதவிகிமாக உள்ளது.

மேலும், மேற்படிப்புக்காக  வெளியூர் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை 101%  அதிகரித்துள்ளது. அதே வேளையில் படிப்புக்காக வெளியூர் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 229%  அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால், பெண்கள் வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வதற்கான முதல் காரணம் திருமணம். அதன்பிறகு, அவர்கள் பணியில்  சேர்வதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.  இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், பெண்கள் தங்களின் பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு, கடுமையான நகர்ப்புற சூழலில் பணி செய்யவேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக, மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள குக்கிராமத்திலிருந்து வருபவர்கள், மும்பை சென்று வேலை பார்ப்பதால் கிட்டத்தட்ட மூன்று மடங்கு சம்பளம் உயர்வதாக  இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close