Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றங்களைக் குறைக்கத்தான் திருக்குறள் படிக்கச் சொன்னேன் - நீதிபதி நெகிழ்ச்சி !

 

thiruikural

 '6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நீதிபோதனை வகுப்பில் திருக்குறளைப் படிக்கவைக்க வேண்டும்' என, 2016-ம் ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, நீதிபதிகளின் உத்தரவின்படி, திருக்குறளை மாணவர்களுக்கு எளிமையான கையேடாக மாற்றினார், மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அதலையூர் சூரியகுமார். இந்தக் கையேடு, பள்ளி மாணவர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது . இந்நிலையில், வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மகாத்மா காந்தி அரங்கத்தில் பாராட்டு விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி  மகாதேவன் பேசியதாவது, 

suryakumar

"உலகின் ஆசான் திருவள்ளுவர். ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு குறளாவது நாள்தோறும் படிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த, திருக்குறளை கண்டிப்பாகக் கற்க வேண்டும் . ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு வேத நூல் இருந்தாலும், உலகப் பொதுமறை திருக்குறள்தான். இளைஞர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு வழக்கின் மூலமாகத்தான் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்க என்னைத் தூண்டியது. இதை மனதில் ஆழமாக எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்கு திருக்குறளை கையேடாக மாற்றியுள்ளார், ஆசிரியர் அதலையூர் சூர்யகுமார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று நெகிழ்ந்தார். திருக்குறளை பள்ளிப் பாடத்தில் கட்டாயமாக்க உத்தரவிட்டவர் நீதிபதி மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாராட்டு விழாவில், தலைமையாசிரியர் டெய்சி நிர்மலா ராணி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாமிதுரை உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றுப் பாராட்டு தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close