Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை, அமெரிக்கத் தூதரகம் அருகே கார் விபத்து!

car accident

சென்னை, அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிரே உள்ள ஜெமினி மேம்பாலத்தின் கீழே, இன்று இரவு 12.40 மணிக்கு கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பி.எம்.டபிள்யூ கார் மட்டுமே மேம்பாலத்தின் அருகில், காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. மற்றொரு வாகனம் எது, யார் இடித்தார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. அந்த வாகனம், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டது. லாரி இடித்துவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

காவல் துறையால் கைப்பற்றப்பட்ட அந்த ஒரே ஒரு பி.எம்.டபிள்யூ காரிலும் நபர்கள் யாரும் இல்லை. விபத்து நடந்ததற்குப் பின்பு, காரை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். விபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கார் யாருடையது, விபத்து ஏற்படுத்தியது யார் என்பதுகுறித்து காவல் துறையினர் சி.சி.டி.வி காட்சிகளைக்கொண்டு விசாரித்துவருகின்றனர்.

படங்கள்: ஜெ. வேங்கடராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close