Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"தி.மு.க-வினர் கொதித்து எழுந்தால்..." - சீறும் நாகர்கோவில் நகர தி.மு.க.

நாகர்கோவில் நகர தி.மு.க சார்பில், தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிறப்புரை ஆற்ற, முன்னாள் அமைச்சர் துரை முருகன் எம்.எல்.ஏ வருவதாக இருந்தது. விமானம் தாமதம் காரணமாக, அவரால் நாகர்கோவில் வர முடியவில்லை. எனவே, நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ-வும் ,தி.மு.க மாவட்டச் செயலாளருமான சுரேஷ்ராஜன் பேசினார்.

அவர் பேசும் போது, 'குமரி மாவட்டத்தில், தி.மு.க, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கலெக்டர் மற்றும்  அதிகாரிகளைப் பார்த்து குறைகளைச் சொல்ல முடியவில்லை. இந்த அரசு, மக்கள் பிரச்னைகளைப்  புரிந்துகொள்ளவில்லை. மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகம்  ஆண்டுக்கு ரூ. 450 கோடி வருமானம் ஈட்டுகிறது. அதைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது மத்திய அரசு. அதேபோல சேலம் இரும்பாலை, விமான சேவை, ரயில்வே என எல்லாவற்றையும் மத்திய அரசு தாரைவார்க்க இருக்கிறது.

 இப்படி படிப்படியாக எல்லாவற்றையும் தாரைவார்த்தால், எப்படி வேலைவாய்ப்பு வழங்க முடியும். தி.மு.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பேசத் தடையாக உள்ளது. இப்போது அரசு செய்யவேண்டிய பணிகளை எதிர்க்கட்சி செய்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தமிழகக் கடன் அதிகரித்துள்ளது. அதனால் நலத் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் ஜெயலலிதா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று  முதலமைச்சர்களைக் கண்ட மாநிலம் தமிழகம். விரைவில் தமிழகத்துக்கு தேர்தல் வர இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போராடுகிறார் ஸ்டாலின். எந்தத் தேவைக்கும் நீதிமன்றம் போகவேண்டி இருக்கும்போது, இந்த அரசு எதற்கு? வடசேரி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஜெயலலிதா மணல் சிலையை அ.தி.மு.க-வினர் அமைத்துள்ளனர். அதை மாவட்டச் செயலாளர் விஜயகுமார் போலீஸ் பாதுகாப்போடு பாதுகாக்கிறார். அதை அகற்ற மனு கொடுத்தும் பயன் இல்லை. அதை அகற்றப் போராட்டம் நடத்தினால் காவல்துறை தடுக்கிறது. தி.மு.க தொண்டர்கள் கொதித்து எழுந்தால் போலீஸாரால் தாக்குப்பிடிக்க முடியாது'' என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close