Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துக்க வீடுகளில் போலி இன்சூரன்ஸ் மோசடி..!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் வட்டாரத்தில், சமீப காலமாக மோசடிகளில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

Scam

இந்த வட்டாரத்தில் அஞ்சலி போஸ்டர், நாளிதழ் விளம்பரத்தில் பார்த்து,  இறந்தவர் பற்றி விசாரித்துக் கொண்டு டிப்டாப்பாக சிலர் துக்க வீட்டுக்குச் செல்கிறார்கள். வெள்ளந்தியான குடும்பங்களாகப் பார்த்துக் குறிவைக்கிறார்கள்.

'இறந்தவர், தங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிஸி எடுத்திருக்கிறார்; அவருக்கு 5 லட்சம், 10 லட்சம் கிடைக்கும். அவர் இறந்தது கேள்விப்பட்டதால் நேரில் வந்தேன்' என்று சாவு வீட்டுக்காரர்களிடம் ஆசையைத் தூண்டிவிட்டு, ரேஷன்கார்டு, ஆதார் ஜெராக்ஸுடன் சர்வீஸ் சார்ஜ் 10,000 ரூபாய் கேட்பார்.

விரைவில் பணம் வாங்குவதற்கான வேலைகளைப் பார்க்கிறேன் என்று சொல்வது மட்டுமல்லாமல், தன்னுடைய விசிட்டிங் கார்டையும் பந்தாவாக எடுத்து நீட்டுவார். நாளைக்குப் பணம் தருகிறோம் என்று சொல்கிறவர்களை மீண்டும் பார்ப்பதில்லை. உடனே பணம் கொடுக்கிறவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பணத்துடன் சென்றுவிடுவார்.

கொடுக்கப்பட்ட விசிட்டிங் கார்டை எடுத்துக்கொண்டு மதுரையில் குறிப்பிட்டுள்ள இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வந்தால், அதே பெயரில் அங்கு வேறு யாரோ வேலை செய்வார். அவருக்கும் சீட்டிங் செய்தவருக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இப்படி தொடர்ச்சியாக இந்த வட்டாரத்தில் துக்க வீட்டில் பண மோசடியில் ஈடுபடும் நபரைப்பற்றி கதை கதையாகச் சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close