Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குண்டர் சட்டத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் மதுரையில் கைது!

மதுரையில்  குண்டர் சட்டத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

poster

திருமுருகன் காந்தி, டைசன், வளர்மதி உள்ளிட்ட பலரும் அரசுக்கு எதிராகவும் அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராகப் போராடியதால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் காவல்துறை கைதுசெய்தது. மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் நபர்களுக்கு குண்டர் சட்டமா? இனி எல்லாத்துக்கு குண்டர் சட்டம் தானா என கேள்வி எழுப்புவதுபோல புரட்சிகர மாணவர் இயக்கத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் நேற்று இரவு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த தோழர் ஆதி, சுரேஷ் ஆகிய இருவரையும் தெப்பக்குளம் காவல்துறையினர் கைதுசெய்தனர் . இதனால் சமூக வளைதளங்களில் தொடர்ச்சியாக எதிர்ப்புக் கிளம்பிவருகிறது. சில நாள்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் எங்களை போராட்டத்துக்குத் தூண்டும் எடப்பாடி அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, தற்போது, மத்திய மாநில அரசை எதிர்த்து இப்படி ஒரு போஸ்டர் ஒட்டியவர்களைக் கைதுசெய்தது, மதுரையில் தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பிவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close