Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் தொகுதிக்குள் மு.க.ஸ்டாலின்!... உச்சகட்ட பதற்றத்தில் சேலம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்குட்பட்ட, சேலம் மாவட்டத்தில் இருக்கும் கச்சராயன் ஏரியில், வண்டல் மண் எடுப்பதைக் கண்டித்து தி.மு.க-வினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மு.க.ஸ்டாலின்

தி.மு.க., சில மாதங்களாகவே தமிழகத்தின் நீர்நிலைகளைப் பொது மக்களின் உதவியுடன் தூர் வாரி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சில நாள்களுக்கு முன்னர் கச்சராயன் ஏரியைப் பொது மக்கள் உதவியுடன் தி.மு.க-வினர் தூர் வாரினர். தூர் வாரும் பணியைப் பார்வையிட, அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை சேலம் வருவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் கச்சராயன் ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தி.மு.க-வினர், 'நாங்கள் பொது மக்கள் உதவியுடன் ஏரியைத் தூர் வாரி கரையைப் பலப்படுத்திவிட்டோம். இப்போது, வண்டல் மண் எடுக்கிறேன் என்ற பேரில் ஏரியின் கரையை உடைக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்துவோம்' என்று கூறி போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்றும் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்றதால், ஆத்திரமடைந்த தி.மு.க-வினர், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இதனிடையே மு.க.ஸ்டாலின், 'சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கச்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன். எனது வருகையை தடுக்கவே அ.தி.மு.க-வினர் கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., தூர் வாரிய சேலம் கச்சராயன் ஏரியில், மண் அள்ள அனுமதித்துள்ளது சட்டவிரோதமானது. சேலம் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட உள்துறைச் செயலாளர் முன்வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close