Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழுக்கு 'நோ'; தெலுங்குக்கு 'எஸ்' - அனுஷ்கா அதிரடி

10 ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'ரெண்டு' திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அனுஷ்கா. அதன்பின், தமிழில் முன்னணி கதாநாயகியாகப் பெரிய ரவுண்டு வருவோம் என்று காத்திருந்தவருக்கு, குட்பை கூறி அனுப்பியது கோடம்பாக்கம்.  

anushka

ஆந்திராவில், நாகார்ஜூனாவுக்கு யோகா கற்றுக்கொடுக்க வந்த அனுஷ்கா, அவருடைய அறிவுரைப்படி தெலுங்கு சினிமாவில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். 'அருந்ததீ', 'பஞ்சமி' என்று ஹீரோயின் ஓரியன்டட் படங்களில் நடித்துவந்த அனுஷ்காவை, விஜயசாந்தியின் நாற்காலியில் அமரவைத்து அழகுபார்த்தது அக்கடபூமி. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் மட்டும் நடிக்காமல், அவ்வப்போது விசா எடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று விஜய், சூர்யா, கார்த்தி, ஆர்யாவுடன் ரிலாக்ஸ்டாக டூயட் பாடித் திரிந்தார் அனுஷ்கா. 'பாகுபலி' வெளிவந்த பிறகு, அனுஷ்காவின் திரைப்பட வாழ்வையே புரட்டிப்போட்டது. யோகா டீச்சராக உலவிய அனுஷ்காவை, உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மகாராணியாகப் படம்பிடித்துக்காட்டியது 'பாகுபலி'
             

முன்பு, தேடிவரும் எல்லா படங்களையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டு நடித்த அனுஷ்கா, ராஜமெளலியின் 'பாகுபலி' படத்துக்குப் பிறகு, எந்தப் புதுப் படத்துக்கும் எளிதில் கால்ஷீட் தராமல் தவிர்த்துவந்தார். அதுமட்டுமல்ல, பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, புதுப் படத்தில் நடிப்பதற்கு 4 கோடி ரூபாய் என்று சம்பளத்தை உயர்த்திக்கொண்டார். 'இனிமேல், கெளரவத் தோற்றத்தில் நடிக்க மாட்டேன்' என்று அனுஷ்கா இருந்த விரதத்தை 2 கோடி ரூபாய் உலுக்கி உடைத்துப்போட்டது.

'பாரத் அனே நேனு' படத்தில் மகேஷ்பாபுடன் நடிக்கும் ஒரு குத்தாட்டப் பாடலுக்குத்தான் 2 கோடி சம்பளம். தெலுங்கு சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதைப்போல, தற்போது தமிழ்சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தால் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், 'மகேஷ்பாபு எனக்கு நல்ல நண்பர். ஒரு பாட்டுக்கு நடிக்க அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. இனிமேல் வேறு எந்த மொழிப் படங்களிலும் ஒரு  குத்தாட்டப் பாடலுக்கு டான்ஸ் ஆடமாட்டேன்' என்று விளக்கம் தருகிறார் அனுஷ்கா.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close