Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் பூட்டை உடைத்து 120 சவரன் தங்க நகை கொள்ளை..!

சென்னை வடபழனியிலுள்ள மின்வாரிய அதிகாரி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வடபழனி ஆண்டாள் நகர் ராகவன் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருவள்ளுவர் மின்வாரியம் அலுவலகத்தில் உதவி பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இவருடைய வீட்டுப் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 120 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மின்வாரிய அதிகாரி ராஜேந்திரன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வடபழனி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close