Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலிகள் மீதான தடை உத்தரவும்... தடை நீக்க உத்தரவும்... பின்னணி என்ன?

புலிகள்

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியிருப்பதற்கு தமிழின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு போராடி வந்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சில தனிநபர்களின் பெயர்களும், 22 அமைப்புகளின் பெயர்களும் பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்திருந்தது. அதைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பையும் பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்தது... தடையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து 2011-ம் ஆண்டு லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், புலிகளின் மீதான தடையை நீக்கக்கோரி புலிகளின் ஆதரவாக நெதர்லாந்து வழக்கறிஞரான விக்டர் கோப் வாதடிவந்தார். 'நீதிமன்றத்தில் இந்த விசாரணையின்போது, 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தாமல் அமைதியான முறையிலேயே தங்களின் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவித்துவந்துள்ளனர். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகள் மீது எப்படித் தடை விதிக்கலாம்?' என்ற கேள்வியுடன் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவு 2014-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தால் திரும்பப் பெறுவதாக இருந்தது. இருப்பினும் யூனியன் நீதிமன்றமே, உச்ச நீதிமன்ற கருத்தையும் கேட்பதற்காக மேல்முறையீடு செய்திருந்தது. அதனால் ஒன்றிய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை தள்ளி வைத்தது.

புலிகள்

தற்போது இந்த மேல்முறையீட்டின் படி, ஐரோப்பிய யூனியன் ஒன்றிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் விடுதலைப்புலிகள் 2009- ம் ஆண்டுக்குப் பிறகு ஆயுதம் கொண்டு எந்தவொரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை. புலிகள், வன்முறை செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரமும், மேலும் தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ‘விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தாமல் வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ எனக் கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதேபோல் 2003-ம் ஆண்டு, பாலஸ்தீன முஸ்லீம் அமைப்பான ‘ஹமாஸ்’ இயக்கத்தையும் ஐரோப்பிய யூனியன் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தது. தற்போது, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தாக்குதல் நடத்திய மற்றும் தாக்குதல் நடத்துவதற்கான திறன் விடுதலைப் புலிகளிடம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை’ என அறிவித்து, அதன் மீதிருந்த தடையையும் நீக்கியுள்ளது, ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம். இந்தச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழின ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close