Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மசூர் பருப்பு தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு ! டெண்டருக்கு தடை நீட்டிப்பு ! 

மசூர் பருப்பில் பயன்படுத்தப்படும் ஆசிட்டால் மூட்டுவலி, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்கள் மனிதனுக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிராவில் மசூர் பருப்பால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பொது விநியோகத்துக்கு இந்தப் பருப்பைப் பயன்படுத்த அரசு பரிந்துரை செய்திருந்தது. இதனை எதிர்த்து காரைக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் ஆதிஜெகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

masur

அம்மனுவில் கடந்த மாதம் 26-ம் தேதி. 30 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் மசூர் பருப்பைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். விஷத்தன்மை கொண்ட இந்தப் பருப்புகள் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டால், மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பொது விநியோகத் திட்டத்துக்கு மசூர் பருப்பைக் கொள்முதல் செய்யவிருக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

masuur

மசூர் பருப்பின் தடைக்கு எதிராக வந்த அரசு தரப்பு மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஆகஸ்ட் 28-ம் தேதிவரை தடையை நீட்டித்தும், இது குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலர் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close