Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான்காவது நாள் பொறியியல் கலந்தாய்வு..! 4,000 பேருக்கு இடம் ஒதுக்கீடு

பொதுப் பிரிவினருக்கான நான்காவது நாள் கலந்தாய்வில் 6,264 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 4,355 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 


பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணாப் பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இன்று நான்காவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது.

இன்று (26.7.2017) 190.50 முதல் 187.50 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவையும் கல்லூரியையும் தேர்ந்தெடுத்தார்கள்.

இன்று 6,264 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 4,355 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. 1,879 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. இதுவரையில் நான்கு நாள் கலந்தாய்வில் 5,279 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. இதுவரையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 16,229 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

நாளை ஐந்தாம் நாள் கலந்தாய்வு நடைபெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close