Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லஞ்சம் கேட்டதால் படமெடுத்து ஆடிய நாகராஜ்; பெட்டிப்பாம்பாக அடங்கிய ஆர்.டி.ஓ!

ஞ்சம் கொடுக்க மறுத்து வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தை ஆர்.டி.ஓ அலுவலகத்திலேயே நிறுத்தி வைத்து நெத்தியடி கொடுத்திருக்கிறார் திருப்பூர்வாசி ஒருவர்.

லஞ்சம் கேட்டதால் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்திய வாகனம்திருப்பூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், புதியதாக டி.வி.எஸ் ஜுபிடர் இருசக்கர வாகனம் வாங்கியிருக்கிறார். முன்பணமாக ரூ. 21 ஆயிரம் செலுத்தியிருக்கிறார் மீதி தொகையை இரண்டு வருட தவணையில் அடைக்க வேண்டும். ஷோரூமில் பில் கேட்டதற்கு ரூ. 19 ஆயிரத்துக்கு மட்டுமே அளித்துள்ளனர். மீதி 2 ஆயிரம் வாகனப் பதிவுக்காக ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்களுக்கு லஞ்சமாக கொடுக்க கொடுக்க வேண்டுமென்று அவரிடம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ், 'வாகனப் பதிவுக்கு ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

ஆனாலும் ஷோரூமில் உள்ளவர்கள் 21 ஆயிரத்துக்கு பில் கொடுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, லஞ்சம் கேட்கும் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்களுக்கு பதிலடி கொடுக்க நாகராஜ் முடிவெடுத்தார். வாங்கிய புத்தம் புது இருசக்கர வாகனத்தை திருப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில், கொண்டு வந்து நிறுத்தி அதில், ஒரு  போர்டையும் எழுதி தொங்க வைத்து விட்டுப் போய் விட்டார். 

இதனால், ஆர்.டி.ஓ அலுவலகம் ஆடிப்போனது. உடனடியாக, திருப்பூர் ஆர்.டி.ஓ சிவகுருநாதன், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஷோரூமுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. நாகராஜ் கூறுகையில், 'ஒரே வாரத்தில் என் வாகனத்தைப் பதிவு செய்து தருவதாக இப்போது வாக்குறுதி அளித்துள்ளனர் '' என்றார். 

லஞ்சத்துக்கு எதிராக படமெடுத்து நாகராஜ் ஆடியதால், ஆர்.டி.ஓ அலுவலர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close