Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் போராளிகளுக்கு சிறை ஒரு போராட்டக்களம், வழக்குகள் அதன் சன்மானம்! - குபேரன்

கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்ததற்காக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வுத்துறை மாணவர் குபேரன், கடந்த 20-ம் தேதி கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு வாரத்துக்குப் பிறகு, இன்று ஜாமீனில் வெளியே வந்த அவர், "போராட்டம் என்பது, போராடும் மக்களுக்கு அடிப்படை உரிமையில் ஒன்று. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு, காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருக்கும்போது, தங்களுடைய வாழ்வாதாரத்துக்காகப் போராடும் மக்களை, தமிழக அரசு அச்சுறுத்துவதும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதும், குண்டாந்தடிகளை ஏவிவிட்டுத் தாக்குவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஈவ்டீசிங் என்று பொய் வழக்குப் போட்டு, உனக்கும் வளர்மதிக்கும் என்ன தொடர்பு... நீங்கள் அரசுக்கு எதிராகப் போராடுகிற கூட்டமா? அதில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று டார்ச்சர் செய்தார்கள். மக்களுக்காகப் போராடுபவர்களைத் தீவிரவாதிகள்போல சித்திரிக்கிறது இந்த அரசு. அதற்காக நான் முடங்கிவிட மாட்டேன். மக்களுக்காகப் போராடும் போராளிகளுக்கு சிறை ஒரு போராட்டக்களம். வழக்குகள் அதன் சன்மானம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close