Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்மாய் தூர் வாரும் பணியைத் துவக்கிவைத்த அமைச்சர்!

சிவகங்கை வட்டம்  கீழப்பூங்குடியில், பொதுப்பணித் துறை (நீர்வளத் துறை) யின் மூலம் நடைபெற்ற கண்மாய் சீரமைப்புப் பணியை   கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சர்  பாஸ்கரன்  துவக்கிவைத்துப் பேசினார்.

Tank clean

" இந்தக் கண்மாயின் மூலம் 55.13 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது, இதன் கரை, 1,524 மீட்டர் நீளம் கொண்டது. 4 மடைகள் மற்றும் 1 நீர்வழிப் போக்கியும் உள்ளன. இதில் 0.26 மில்லியன் கன அளவு தண்ணீரை தேக்கிவைக்க இயலும். இந்தக் கண்மாய்க்கு, நாமனூர் கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது" என்று கூறினார். மேலும், தற்போது இந்தக் கண்மாயில் படுகை வண்டல் மண்ணால் மேவப்பட்டும், சீமைக்கருவேல மரங்களால் மூடப்பட்டும் உள்ளதால், தண்ணீர் தேக்கும் கொள்ளளவு குறைந்தும், கரை உயரம் தாழ்ந்து, பலமிழந்த நிலையிலும் உள்ளது. இந்தக் கண்மாயின் மூன்றாவது மடை, முழுவதுமாக தண்ணீர் வழங்க இயலாத நிலையில் உள்ளதாகவும் பேசினார்.

மேலும், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கண்மாயின் படுகையிலிருந்து மண்ணை எடுத்து, கரையை முழு மட்டத்துக்கு உயர்த்திப் பலப்படுத்தவும் பழுதடைந்த 3-வது மடையை பழுதுபார்க்க ரூ.10.00 லட்சத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணி நிறைவடையும்போது, 55.13 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி உறுதிசெய்யப்படும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close