Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத்துக்கு அள்ளிக்கொடுத்த மோடி அஸ்ஸாமுக்கு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை!

குஜராத் மாநிலம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை ஹெலிகாப்டரில் சென்று பார்த்த பிரதமர் மோடி, உடனடியாக ரூ.500 கோடி நிவாரண நிதியாக அறிவித்தார். அண்மையில், அஸ்ஸாமிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 29 மாவட்டங்கள் வெள்ளத்தால் சின்னாபின்னமாகின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.  மழைவெள்ளத்துக்கு 76 பேர் பலியாகினர். 

குஜராத் வெள்ளத்தை பார்வையிட்ட மோடி

இப்போதுகூட பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அஸ்ஸாமில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதமதிப்பு ரூ.2,939 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. பிரதமர் என்ற முறையில் அஸ்ஸாம் பக்கம் மோடி எட்டிக்கூட பார்க்கவில்லை. அமைச்சரவையிலேயே ஜூனியரான கிரண் ரிஜ்ஜூவை வெள்ளத்தை பார்வையிட அங்கு அனுப்பி வைத்தார். 

அதேவேளையில்,  குஜராத் வெள்ளத்தைப் பார்வையிட மட்டும் உடனடியாகச் சென்றதுடன், நிவாரண நிதியாக ரூ. 500 கோடி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்துக்கு சல்லிக்காசுகூட  இடைக்கால நிவாரண நிதி வழங்காத நிலையில், குஜராத்துக்கு மட்டும் உடனடி  நிவாரண நிதி அளிப்பது,  மாநிலங்களுக்கு மாநிலம் மத்திய அரசு வேறுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

'அஸ்ஸாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிக்கவில்லை என்றாலும்கூட பரவாயில்லை. குறைந்தபட்சம் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட கூட அங்கு போகாத பிரதமர் மோடி, குஜராத் என்றதும் ஓடியது ஏன்?. பிரதமர்  என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் ' என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. 

அஸ்ஸாமிலும் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சிசெய்கிறது என்பது கூடுதல் தகவல்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close