Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகப் பயணிகளை ஏற்றச் சொல்லும் தனியார் பேருந்து நிர்வாகிகள் – கவலையில் பேருந்து ஓட்டுநர்கள்

தனியார் பேருந்து நிர்வாகிகள்தனியார் பேருந்து ஓனர்கள், அதிகப் பயணிகளை ஏற்றும்படி வலியுறுத்துவதாக திருச்சி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அந்தச் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமையில், தனியார் பேருந்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செல்வம், முகமது இக்பால், கண்ணன், செந்தில், ரெங்கராஜன் சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்,

தனியார்  நகரப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், பிரதமர் அறிவித்துள்ள அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வங்கியில் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நம்மிடம் பேசிய நிர்வாகிகள்,

"தனியார் பேருந்து நிர்வாகிகள், கூடுதலாகப் பயணிகளை ஏற்றச் சொல்லியும், கூடுதலாகப் பணி செய்யவும் வலியுறுத்துகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. எங்களுக்கு மிக அதிகமான மன உளைச்சலை உண்டாக்குகிறது. அவர்கள் சொல்லும்படி நாங்கள் நடந்துகொண்டால், பலருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எங்களின் கோரிக்கைகளை ஏற்று, எங்களுக்கு அரசு உதவ வேண்டும்" என்றார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close