Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருந்ததிராய் 'மேன் புக்கர்' விருதுக்குப் பரிந்துரை!

அருந்ததிராய்

ந்தியாவின் புகழ் பெற்ற சமூகப் போராளி மற்றும் எழுத்தாளர், அருந்ததிராய். தேசிய அளவிலும் தனது படைப்புகளுக்காக விருது பெற்றவர். ஆங்கில இலக்கிய உலகின் உயரிய விருது, ‘மேன் புக்கர்’. இவரின் ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலுக்கு 1997-ம் ஆண்டு 'மேன் புக்கர்' விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த விருதுக்காக உலக அளவில் 144 நாவல்கள் பரிந்துரைக்கப்பட்டன. முதல்கட்ட தேர்வில், அருந்ததிராயின் ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ உட்பட 13 நாவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே, அருந்ததிராய் இந்தப் பரிசை வென்றிருப்பதால், இந்த முறையும் பரிசை வெல்வார் என்ற கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த 13 நாவல்களில் சிறந்த 6 நாவல்களின் பட்டியல் செப்டம்பர்-13 அன்றும், அதைத் தொடர்ந்து வெற்றியாளர் பெயர் அக்டோபர்-17 அன்றும் அறிவிக்கப்பட இருக்கிறது. வெற்றிபெறுபவருக்கு இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம் கிடைக்கும். அதோடு, சர்வதேச இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close