Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைதுசெய்யப்படுகிறாரா ஸ்டாலின்...?: பதற்றத்தில் சேலம், கோவை!


சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொங்கணாபுரம் கச்சராயன் குட்டை தூர் வாரும் பிரச்னையில், தி.மு.க., அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்ட பிரச்னையில், இரு தரப்பும் மோதிக்கொள்ளும் அபாய சூழ்நிலை நிலவிவருகிறது.

இந்நிலையில், தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கச்சராயன் குட்டையைப் பார்வையிட இன்று வர இருக்கிறார். இதனிடையே,
ஏரிக்குள் அ.தி.மு.க-வினர் சாமியானா பந்தல் அமைத்து, டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். 

ஏரியைப் பார்வையிடுவதற்கு ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. "சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், எடப்பாடி கச்சராயன் ஏரியைப் பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்று சேலம் எஸ்.பி.ராஜன் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் தடையை மீறி வரக்கூடும் என்பதால், அங்கு 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இரண்டு வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்டாலின் கொங்கணாபுரம் வருவதற்கு முன்பே சங்ககிரியில் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின்

கச்சராயன் குட்டை செல்வதற்காக, கோவை வந்த ஸ்டாலினை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் தி.மு.க தொண்டர்கள்  குவிந்துள்ளனர். அந்தப் பகுதியில் போலீஸாரும் குவிந்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close