Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகஜோதிக்காவது சீக்கிரம் நீதி கிடைக்கட்டுமே!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து 7கி.மீ தொலைவில் இருக்கும் கிராமம் ரோசனப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், மதுரை மத்தியச் சிறையில் மர்மமான முறையில் இறந்ததைக் கண்டித்தும் நீதி விசாரணை நடத்தக்கோரியும் நேற்று கிராம மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சிறையில் மர்ம மரணம்:-

ஒரு அடிதடி வழக்கில், கடந்த 23-ம் தேதி ராஜதானி போலீஸார் கருப்பசாமியைக் கைதுசெய்கிறார்கள். அன்றே, மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்தியச் சிறைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். அடுத்த நாள் (ஜூலை 24) கருப்பசாமியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவருக்கு ஒரு போன் வருகிறது. சிறை நிர்வாகம் தரப்பிலிருந்து வந்த அழைப்பில்,  ’கருப்பசாமி, இரவில் யாருக்கும் தெரியாமல் தனது சிறையில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்துகொண்டதாகவும், அவரது சடலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமியின் மனைவி நாகஜோதி மற்றும் அவரது பிள்ளைகள், மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே உடல் முழுவதும் காயங்களோடு கருப்பசாமி சடலமாகக் கிடந்திருக்கிறார். இதுகுறிந்து போலீசார் தரப்பில் விளக்கம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துள்ளனர். தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சடலத்தை வாங்க மறுத்துவிட்டார் நாகஜோதி.

இறந்தவர் பெயரில் கடிதம்:-

தனது கணவரின் மர்ம மரணம் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நாகஜோதிக்கு, நேற்று காலை ஒரு கடிதம் வந்தது. அது, கருப்பசாமி சிறையில் இருந்து எழுதிய கடிதம். அதில். “அன்புள்ள மனைவிக்கு, கணவர் கருப்பசாமி எழுதுவது. நான் மதுரை மத்திய சிறையில் உள்ளேன். என்னை திங்கள், புதன், வெள்ளியன்று வந்து பார்க்கலாம். வரும்போது அடையாள ஆவணம் ஒன்று கொண்டு வரவும். மற்றவை நேரில். இப்படிக்கு கருப்பசாமி” என்று எழுதப்பட்டிருந்தது. கருப்பசாமி இறந்த 24-ம் தேதிக்கு இரண்டு நாள்களுக்குப் பின்னர் எழுதப்பட்டு நேற்று வந்த கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் நாகஜோதி. தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்  கூறிய  நாகஜோதி, ' கணவனின் மரணம்குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் இறங்கினார். அவருக்கு துணையாக ரோசனப்பட்டி கிராமமே நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகஜோதி நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதில், “தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை சிறைக்காவலர்கள் அடித்துக் கொன்றதாகத் தான் சந்தேகப்படுவதாகவும். உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதை வீடியோவில் பதிவுசெய்யக் கோரியும் மனுவில் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்து, அதை வீடியோவில் பதிவு செய்ய மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டார்.

எத்தனை எத்தனை மரணங்கள்:-

ஒருபுறம், எதற்காக சிறையில் இருக்கிறோம் என்று தெரியாமலே, ஆயுள் கைதிகள்போல சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள். மறுபுறம், விசாரணைக் கைதிகளின் தொடர் மரணங்கள். இன்னும் எத்தனை எத்தனை மரணங்களைச் சந்திக்கப்போகிறோம் நாம்? இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையைத் தனி ஆளாக இருந்து வளர்க்கும் சூழலுக்கு நாகஜோதி தள்ளப்பட்டிருக்கிறார். அடையாளம் தெரியாமல் எத்தனையோ நாகஜோதிகள் நம் கண் முன்னே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் நிவாரணம் ’ஒன்றுமே இல்லை..’ என்பதுதான், நீதி விசாரணை என்ற பெயரில் பல வருடங்களுக்கு வழக்கை நகர்த்தாமல், விரைந்து விசாணையை முடிக்க வேண்டும். நாகஜோதிக்காவது சீக்கிரம் நீதி கிடைக்கட்டும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close