Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃப்ரீசார்ஜை வாங்குகிறது ஆக்சிஸ் பேங்க்!

ஸ்னாப்டீலின் பேமென்ட் வாலட் ஃப்ரீசார்ஜை ஆக்சிஸ் பேங்க் வாங்க இருக்கிறது. சுமார் 60 மில்லியன் டாலருக்கு இந்த டீல் நிறைவுபெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃப்ரீசார்ஜ்

இகாம்ர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் தனது பேமென்ட் மொபைல் வாலட் பிராண்டான ஃப்ரீசார்ஜை 60 மில்லியன் டாலருக்கு ஆக்சிஸ் பேங்கிடம் விற்க இருக்கிறது. இதே ஃப்ரீசார்ஜ்தான் 2015ல் 400 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது. ஆனால், இரண்டு வருடத்தில் இதன் மதிப்பு இந்த அளவுக்குச் சரிந்திருக்கிறது. காரணம் கடந்த வருடத்தில் ஸ்னாப்டீல் நிதிதிரட்டுவதில் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வந்தது. 

இதனால் ஃப்ரீசார்ஜை விற்க ஸ்னாப்டீல் திட்டமிட்டு பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஃப்ளிப்கார்ட் ஸ்னாப்டீலை மொத்தமாக வாங்க திட்டமிட்டு வந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. இந்நிலையில், தனது மொபைல் வாலட் பிரிவை மட்டும் ஆக்சிஸ் பேங்குக்கு விற்க முடிவு செய்திருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close