Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அம்மா’ இல்லாதது வருத்தமளிக்கிறது: கலாம் நினைவிடத்தில் மோடி பேச்சு!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து, அவரது நினைவிடத்தில் உரையாற்றினார்.

மோடி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' கட்டப்பட்டுள்ளது. கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து தற்போது உரையாற்றிவருகிறார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, ‘முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடப் பணி மிக விரைவில் சிறப்பான முறையில் நடந்துள்ளது. அப்துல் கலாம் மூலம் ராமேஸ்வரம் மேலும் புகழை எட்டியுள்ளது. குறுகிய காலத்தில் நினைவிடப் பணிகள் நிறைவுபெற்றது, அரசாங்கத்தையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதுபோன்றதொரு சூழ்நிலையில், அம்மா (ஜெயலலிதா) இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் இருந்திருந்தால், இந்தப் பணியை மேலும் பாராட்டியிருப்பார்’ என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close