Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குருபெயர்ச்சி பூஜையில் திவாகரன்! - அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுதல்?

திருவாரூர் மாவட்டம் குடவாசலிலுள்ள சேஷபுரீஸ்வர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் திவாகரன் திடீரென வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டார். 

திவாகரன்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் பிரசித்திபெற்ற சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. அந்தக் கோயில், ராகுவும்-கேதுவும் இணைந்து இறைவனை வழிபட்டதால் ராகு-கேது தோஷ நிவர்த்தித்தலமாக விளங்குகிறது. இன்று ராகு-கேது பெயர்ச்சியையொட்டி 12.48 மணியளவில் ராகு, சிம்மராசியிலிருந்து கடகராசிக்கும், கேது கும்பராசியிலிருந்து மகரராசிக்கும் பெயர்ச்சியடைந்தது. அதனையொட்டி ராகு-கேதுவிற்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தும், ராகு-கேது பெயர்ச்சிக்குரிய பரிகார பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.  

திவாகரன்

பெயர்ச்சிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக மன்னார்குடி திவாகரன் திடீரென கோயிலுக்கு வருகை தந்தார். திவாகரன் வருகை குறித்து கோயில் வட்டாரத்தில் விசாரித்தபோது, "ராகு-கேது பெயர்ச்சிக்குபின் திவாகரன் மீண்டும் பழையபடி கட்சியிலும், ஆட்சியிலும் பவர் சென்டராக வலம் வருவார் என அவரது ஆஸ்தான ஜோதிடர் அருள்வாக்கு கூறியதன் காரணமாகவே, இன்றைய நாளில் வருகைதந்தார்.  பக்தர்களுக்கு இடையூராக இருக்கவேண்டாம் என்பதற்காகவே முன்னதாகவே புறப்பட்டார் என்றனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close