Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரமடையும் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்!

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், கடந்த 20 ஆண்டுகளாகப் பத்தாயிரத்திற்க்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைபார்த்துவருகின்றனர். அவர்களின் 26 நாள்கள் வேலை என்பதை 19 நாள்களாக குறைந்திருக்கிறது நிர்வாகம். இதனைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். என்.எல்.சி.  ஒப்பந்தத் தொழிலாளர்கள். 14-வது நாளாக நீடிக்கும் இன்றைய போராட்டத்தில் அவர்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்தப்  போராட்டம் குறித்து பேசிய தொழிலாளர்கள், "ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியிலிருந்து வெளியேற்றவும், அவர்களின் வேலை நாள்களைக் குறைக்கவும் காரணம் பி.ஜி.ஆர், மகாலட்சுமி, எல்&டி, ஏ.பி.பி, டைசன் குரூப் மற்றும் எப்.எம்.சி. போன்ற தனியார் நிறுவனங்கள்தான். அவர்கள் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து மண்ணின் மைந்தர்களைப் புறக்கணிக்கிறார்கள். அந்த நிறுவனங்களை உடனடியாக என்.எல்.சி.யை விட்டு வெளியேற்றவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 


என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்யவேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்கவேண்டும். இது தொழிலாளர்கள் பிரச்னை மட்டுமல்ல, சமுதாயப் பிரச்னை. அதனால், நாளை அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவிக்க உள்ளோம்" என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close