Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஞ்சிபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க-வினர் மனிதச்சங்கிலி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாள்களுக்கு முன், தி.மு.க-வின் மாவட்டக்  கழகச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்துவதற்கான முக்கியத் தீர்மானம் ஒன்றை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வினர் நிறைவேற்றினர்.

neet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான போராட்டம் நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காஞ்சிபுரத்தில் மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் தமிழத்துக்கு விலக்குக் கோரி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தலைமையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. காந்தி ரோடு  முதல் பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை தி.மு.க-வினர் மனிதச் சங்கிலி அமைத்து நீட் தேர்வுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி. எழிலரசன், செய்யூர் எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசு, காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பல ஆயிரக்கணக்கான தி.மு.க மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close