Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவுக்கான என் கனவு இதுதான்...!' - கொளக்குடி அரசுப் பள்ளி மாணவியின் 'கோகோ' சபதம்

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பை, பதக்கம் வாங்கிய தனியார் பள்ளி மாணவர்கள், லைம் லைட் வெளிச்சத்துக்குள் வந்துவிடுவது சகஜம். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு பதக்கங்கள் வாங்கினாலும் வெளியில் தெரிவதே இல்லை. அதுபோல ஓர் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிதான் ரோஜா.

திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்2  படிக்கும் மாணவி ரோஜாவின் கழுத்தில் தேசிய, மாநில, மாவட்ட கோகோ விளையாட்டுப் போட்டிகளின் வெற்றிப் பதக்கங்கள், கை நிறைய சான்றிதழ்கள். தடகளம், கோகோ என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ரோஜாவிடம் பேசினோம்.  ''அப்பா பழனி, விவசாயம் பண்ணுறாரு. அம்மா மீனாட்சி, அவருக்கு உதவியாக இருக்காங்க. என் அண்ணன் பெயர் ராஜா. நாங்க ரெண்டு பேரும் டுவின்ஸ். அவனும் என்னைப் போலவே கோகோ விளையாட்டுல நிறைய மெடல், அவார்ட்ஸ் வாங்கியிருக்கான். பத்தாவதுல ஃபெயில் ஆனதால், அவன் படிக்க வரலை. நான் ஆறாவது படிக்கும்போது விளையாட்டு மீது ஆர்வம் வந்திடுச்சி. கோகோ விளையாடும்போது, அதுமேல இன்னும் ஆர்வம் வந்திடுச்சி. ஏழாவது படிக்கும்போது பேட்ரிக் ஆஃப் டெஸ்ட்  போட்டியில் கலந்துகிட்டு 6,000 ரூபாய் பரிசு வாங்கினேன். அந்த பணத்துல எங்க அப்பா வாங்கிக் கொடுத்ததுதான் இந்த செயின்'' என ஆசையோடு காட்டினார். ''எட்டாவது படிக்கும்போது, ஸ்டேட் லெவல்  போட்டிகள்ல விளையாடினேன். கோகோ மட்டுமில்லாம, தடகளப் போட்டிகளிலும் ஜெயிச்சி பதக்கமும் சான்றிதழும் வாங்கியிருக்கேன்.

9-வது, 10-வது படிக்கும்போதும் மாநில தடகளப் போட்டிகள்ல விளையாடினேன். 11-வது படிக்கும்போது SGFI தேசிய விளையாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டு  கோகோ விளையாட்டுல வெள்ளிப்பதக்கம் வாங்கினேன். சுதந்திரம் கிடைச்ச பிறகு, கோகோ விளையாட்டுல முதல் தடவையா பதக்கம் நாங்கதான் வாங்கியிருக்கோம். ராமமூர்த்தி சார் நல்லா பயிற்சி கொடுக்கிறாரு. இன்டர்நேஷனல் லெவல்ல கோகோ விளையாடி, இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பதுதான் என் கனவு. டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யணும். அதுக்காகவே சயின்ஸ் குரூப் எடுத்து படிக்கிறேன். இதுவரை 40 சான்றிதழ்கள், 25 பதக்கங்கள்,1 கோப்பை என்று வீடு நிறைய கிடக்கு. எங்க அப்பா ரொம்ப சப்போட் பண்ணுறாரு. இன்னும் அதிகப் பதக்கங்களை வாங்குவேன். என் கனவுகளை நனவாக்குவேன்'' என்று சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, கொளக்குடி பள்ளி மைதானத்தில் பயிற்சியில் இறங்கினார்.

ரோஜாவின் ஆசிரியை ஜெயஸ்ரீ பேசும்போது, ரோஜாவை கிரவுண்டுலதான் பார்க்க முடியும். நல்லா படிப்பா. நேஷனல் லெவல்ல போய் விளையாடி எங்க பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கா. ஆனா, ரோஜாவைப் போல விளையாட்டுத் திறமை உள்ள பிள்ளைங்களை பிளஸ் 2 முடிச்சதும் வீட்டுல கல்யாணம் பண்ணிக் கொடுத்துடுவாங்க. அதுக்குப் பின்னாடி, இந்தப் பிள்ளைங்களோட பதக்கக் கனவு, வெறும் கனவாகவே போயிடுது. இந்தப் பிள்ளைங்க குக்கிராமங்களைச் சேர்ந்தவங்களா இருக்கிறதால, இவங்க திறமை வெளி உலகத்துக்குத் தெரியாமலே போயிடுது'' என்று வருத்தப்பட்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close