Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோயிலை இடிக்க முயன்ற ரயில்வே துறை... பதற்றத்தில் கந்தம்பட்டி மக்கள்!

சேலம் கந்தம்பட்டில் உள்ள வடபத்திர காளியம்மன் கோயில் இடிக்கப்போவதாக போலீஸ் குவிக்கப்பட்டதால் கந்தன்பட்டில் பெரும் பதற்றம் நிலவியது.

 

சேலம் கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே இருக்கிறது வடபத்திர காளியம்மன் கோயில். இந்தக் கோயில் இருக்குமிடம் ரயில்வே துறைக்குச் சொந்தமானது. அதனால், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலை இடிக்க ரயில்வே துறை மூலம் 7 முறைக்கு மேல் கந்தம்பட்டி ஊர் மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

’காலகாலமாக இந்தக் கோயில் இங்குதான் இருந்தது’ என்று கூறி கோயில் அகற்றப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் இன்று காலை ரயில்வே துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு இடிக்க முயற்சி எடுத்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் அதிக அளவு கூடினர். இதனால் பதற்ற சூழ்நிலை நிலவியது.

பிறகு, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 20 நாள்களுக்குள் கோயிலை அப்புறப்படுத்துவதாகப் பொதுமக்கள் வாக்களித்ததால் கோயிலை இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இதனால் பதற்றம் தணிந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close