Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதார் தகவல் முறைகேட்டில் ஓலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது கிளைகளைப் பரப்பி வரும் 'ஓலா' நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓலா டாக்ஸி

பிரபல கால்டாக்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 'ஓலா மணி' என்ற ஆப்பை நிறுவியது. இதன் மூலம் டிஜிட்டல் முறையில் மொபைல் பணப் பரிவர்த்தனையை நடத்தி வந்தது. இதற்காகப் புதிதாக ஒரு குவர்த் என்ற நிறுவனத்தின் ஸ்டார்ட் அப்பை ஓலா நிறுவனம் வாங்கியது. இந்த ஸ்டார்ட் அப்பின் பெயர் எக்ஸ்-பே. அந்த ஆப்பின் மூலம்தான் பணப் பரிவர்த்தனையை ஓலா நிறுவனம் மேற்கொண்டது. எக்ஸ்-பே ஆப்பானது டிஜிட்டல் பணிப் பரிவர்த்தனையில் ஆதார் தகவல்களையும் இணைத்தது. ஆதார் எண்ணை இணைக்க ஆதார் பொதுத் தகவல் மையத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், ஓலா நிறுவனத்தின் எக்ஸ்-பே ஆப்பானது அம்மையத்திடம் அனுமதி வாங்கவில்லை. அதனால், ஆதார் பொதுத் தகவல் மையம் ஓலா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு ஓலா நிறுவனத்தின் சார்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close