Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் நவகிரகத் தலங்களை வழிபட, பலன் பெற வழிகாட்டி!

னிதர்களின் வாழ்க்கையில் அவரவர் வினைப் பயன்களைப் பொறுத்து நவகிரகங்கள் பலன் தருகின்றன. நவகிரகங்களால் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை இருந்தால், நவகிரக தலங்களுக்குச் சென்று வழிபட்டால், பாதிப்புகளிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.

நவகிரகங்கள்

 கும்பகோணத்தைச் சுற்றிலும் நவகிரகப் பரிகார கோயில்கள் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் இந்த நவகிரகக் கோயில்கள் அனைத்தையும் தரிசித்துவிட முடியும் என்பதுதான் விசேஷம். நவகிரகக் கோயில்களில் முதலில் நாம் சூரியனார்கோயிலில் இருந்து நம் தரிசனத்தைத் தொடங்க வேண்டும். ஒரே நாளில் நம்மால் நவகிரகத் தலங்களைத் தரிசித்துவிட முடியும். பரிகாரங்களுக்காக மட்டும்தான் நவகிரகத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என்பது இல்லை. வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவதற்காகவும் நாம் நவகிரகத் தலங்களைத் தரிசிக்கலாம்.

சூரியனைத் தரிசித்து வழிபடுவதால் ஆத்ம பலமும், சந்திரனை வழிபடுவதால் மன வலிமையும், செவ்வாயை வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்க்கையும், புதனை வழிபடுவதால் நல்ல கல்வி, தெளிந்த சிந்தனையும், குருவை வழிபட்டால் நல்ல குழந்தைகளும், சுக்கிரனை வழிபட்டால் இனிய இல்லற வாழ்க்கையும், சனியை வழிபட்டால் தர்மம் அறிந்து நடக்கவும், ராகுவை வழிபடுவதால் செயல்களில் வேகமும், கேதுவை வழிபடுவதால் ஆன்மிக நாட்டமும் ஏற்படும். 

திருநாகேஸ்வரம்

கீழே இருக்கும் நவகிரகங்களில் மௌஸை வைத்தால் அந்த கிரகத்துக்கான கோயில் பற்றிய தகவல்கள் வி்ரியும். அதை க்ளிக் செய்தால், ஒரே நாளில் நவகிரகக் கோயில்கள் அனைத்தையும் தரிசிப்பதற்கான விஷூவல் வழிகாட்டி உங்கள் திரையில் விரியும். முதலில் எந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நவகிரகக் கோயில்களுக்குமான தூரம் வரை அனைத்து தகவல்களும் அந்த வழிகாட்டியில் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு வாகனம் உங்களை அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் செல்லும். வித்தியாசமான அந்த அனுபவத்தை உணர நீங்கள் தயாரா?

 

நவக்கிரக ஆலயங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close