Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விருதுநகர் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வெகு நாள்களாக விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படும் காப்பீட்டு தொகை என்னாச்சு, எப்போது வழங்குவீர்கள் என்று விவசாயிகள் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பினர். ஆட்சியர் சிவஞானம் பதில் ஏதும் கூறாததால் கோபமான விவசாயிகள், அவர் அமர்ந்திருந்த இருக்கை முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் சிவஞானம் கூட்ட அரங்கிலிருந்து எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றார்.

  

ஆனாலும், விவசாயிகள் விடுவதாக இல்லை. ஆட்சியரைப் பின்தொடர்ந்து அலுவலக அறையை முற்றுகையிட்டனர்.  இதனால், அவரால் அறையைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்பு, அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தியதால் முற்றுகையை விலக்கிக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் மீண்டும் தொடர்ந்து நடந்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close