Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆகஸ்ட் 7 -ம் தேதி சந்திரகிரகணம், திருப்பதியில் 10 மணிநேரம் சுவாமி தரிசனம் ரத்து!

சந்திரகிரகணம் வருகிற ஆகஸ்ட் 7 -ம் தேதி ஏற்படுகிறது. இந்தச் சந்திரகிரகணம் 7 -ம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கி, இரவு 12.48 வரை நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து  திருமலை திருப்பதிக் கோயிலில் 6 மணி நேரத்துக்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. இதையொட்டி ஆகஸ்ட் 7- ம் தேதி  மாலை 4.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை வழக்கம்போல் நடைபெறும் ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருப்பதி

மீண்டும் அதிகாலையில் கோயிலில் புண்ணியதானம் ஆலய சுத்திக்குப் பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பிறகு ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 7 மணிக்கு சர்வ தரிசனம் மூலமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இதற்கேற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்வது நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close