Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்களை விடுவிக்க உத்தரவு!

மீனவர்களின் படகுகள்

இலங்கை சிறையில் உள்ள 92 தமிழக மீனவர்களில் முதல் கட்டமாக வவுனியா சிறையில் உள்ள 11 மீனவர்களையும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 66 மீனவர்களையும், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதும் அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாக நீடித்து வருகின்றன. பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கும்  ராமநாதபுரம், புதுக்கோட்டை , நாகபட்டினம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் இதனால் தொழில் இழந்து அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு மாற்றுத் தொழிலாக ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தினை மத்திய- மாநில அரசுகள் கொண்டுவந்துள்ளன. இந்தத் திட்டத்தினை பிரதமர் மோடி நேற்று மண்டபத்தில் நடந்த விழாவில் தொடங்கிவைத்தார். 

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள 92 தமிழக மீனவர்களில் முதல் கட்டமாக வவுனியா சிறையில் உள்ள 11 மீனவர்களையும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 66 மீனவர்களையும், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் படகுகள் விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் தங்களின் வாழ்வாதாரமாக திகழும் படகுகள் விடுவிப்பு குறித்து அறிவிப்பு செய்யப்படாதது மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close