Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்துயிர் பெற்ற தனுஷ்கோடி சாலையில் பயணித்த சுற்றுலாப் பயணிகள்

புயலின் கோரத் தாண்டவத்தினால் உருக்குலைந்துபோன தனுஷ்கோடிக்கு 53 ஆண்டுகளுக்குப் பின் பேருந்து  இயக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி புதிய சாலையில் பயணித்த அரசு பேரூந்து

.​​​​​

ஆங்கிலேயர்களின் கடல்வழி பயணத்தின் முக்கியத் தலமாக விளங்கியது தனுஷ்கோடி நகரம். சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பிரதான துறைமுக நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது இது. இந்தியாவில் இருந்து இலங்கை செல்பவர்கள் தனுஷ்கோடி வரை ரயிலில் சென்று பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் செல்வது வழக்கமாக இருந்துவந்தது. 


1964-ம் ஆண்டு டிசம்பர் 23 நள்ளிரவில் பொங்கி எழுந்த புயலின் ஆக்ரோஷத்தினால் துறைமுக நகரமான தனுஷ்கோடி உருக்குலைந்து போனது. அரசு அலுவலகங்கள், இருப்புப் பாதை, தார்ச்சாலை, துறைமுகம், ரயில், மீனவர் வாழ்விடங்கள், கோயில், தேவாலயம் என எதுவும் புயலின் கோரபிடிக்குத் தப்பவில்லை. அதன் விளைவாக தனுஷ்கோடி வாழத் தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. 


ஆனாலும் கடலையே தங்கள் தாயின் மடியாகக் கொண்ட மீனவர்கள் பலர் இன்றும் தனுஷ்கோடியில் வாழ்ந்து வருவதுடன், புயலின் எச்சங்களாக நிற்கும் கட்டடங்களையும் அதனைச் சீர்குலைத்த கடல் அலைகளையும் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்குத் தனியார் வேன்களின் உதவியுடன் சாகசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு அழிந்துபோன தனுஷ்கோடி சாலையை மீண்டும் ஏற்படுத்த திட்டமிட்டது.

இதன் விளைவாக தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து அரிச்சல் முனைவரை சுமார் 9.5 கி.மீ புதிய சாலையினை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஏற்படுத்தினர். 70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையினை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

 இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வந்துள்ள சுற்றுலாப் பயணிகளும், தனுஷ்கோடியில் வசித்து வரும் மீனவர்களும் புதிய சாலையின் வழியாக அரசுப் பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் தனுஷ்கோடிக்கு சென்று மகிழ்ந்தனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி சர்ச் வரை 15 ரூபாயும் அரிச்சல் முனை வரை 20 ரூபாயும் அரசு பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close