Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் 16 வயது சிறுமியை மீட்ட காவல்துறை..! 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்ததாக திருமணம் முடிந்த 2 மாதம் கழித்து 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகிலுள்ள கே.பி. தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். 30 வயதான இவர் கேரளாவில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான அமுதா என்ற சிறுமிக்கும் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இதே கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் மணமகன் மாணிக்கவாசகம் மற்றும் மணப்பெண் சிறுமி அமுதாவும் கேரளாவில் வசித்து வந்தனர்.  

இக்கிராமத்திற்கு பக்கத்து கிராமமான சொக்கலிங்கபுரத்திலுள்ள ஊர்க் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருவரும் கேரளாவிலிருந்து வந்துள்ளனர். அவ்வூரைச் சேர்ந்தவர்கள் கொடுத்த ரகசிய தகவலின்படி தூத்துக்குடி சமூக நலத்துறை அதிகாரிகள் சொக்கலிங்கபுரம் கோயில் திருவிழா நடக்கும் கோயிலுக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையிலும் சிறுமி அமுதாவின் கல்விச்சான்றிதழை சரிபார்த்த போதும் அமுதாவிற்கு தற்போது 16 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது.

உடனே சமூக நலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மாப்பிள்ளை மாணிக்கவாசகம், அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து சிறுமி அமுதாவை மீட்டு தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close