Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பைக் கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால், சிறு குறு விவசாயிகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பல சிறு தொழில்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே உடனே ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும், நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை கலைத்தது மட்டுமல்லாமல், தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் எழுத அனுமதிக்காமல், கட்டாய இந்தி திணிப்பை நடைமுறைப்படுத்துவது போல தேர்வை நடத்துவதைக் கண்டித்தும் ஆர்பாட்டத்தில் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பா.ராமமூர்த்தி தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close