Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்காத நினைவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கலாம் நினைவு மண்டபம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக ராமநாதபுரம் பேய்கரும்பு பகுதியில் மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நினைவு மண்டபத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ. 15 கோடி செலவில் நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த பர்னிகா கமெர்ஷியல் எஸ்டேட் என்ற நிறுவனம் கட்டுமானப் பணியை மேற்கொண்டது. தினமும் 500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 2.1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 1500 சதுர மீட்டர் அளவில் நினைவு மண்டபம் உருவாகியுள்ளது. நுழைவு வாயில்' இந்தியா கேட்' போலவும் கோபுரம் ராஷ்ட்ரபதி பவன் மாதிரியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வெளிப்புறப் பகுதி 150 மில்லி மீட்டர் தடிமன் கிரானைட் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தில் வடக்குப் பகுதியில் கலாமின் கல்லறை உள்ளது. 

மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படங்கள்

மண்டபத்திற்குள் கிரானைட் கற்கள் கொண்டு 40 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் மீது, ஜெய்சால்மரில் இருந்துகொண்டு வரப்பட்ட மஞ்சள் வர்ண கற்கள் பூசப்பட்டிருக்கின்றன. வேலைபாடுமிக்க கதவுகள் தஞ்சையில் தயாரிக்கப்பட்டன. அழகுமிகுந்த சுவரோவியங்கள் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா நகரங்களில் இருந்துகொண்டு வரப்பட்டு மாட்டப்பட்டுள்ளன.  மண்டபத்திற்குச் செல்ல 3 வழிகள் உள்ளன. பாதைகள் ஒவ்வொன்றும் 3.5 மீட்டர் அகலம் கொண்டவை. 

 

                                    

 

மண்டபத்தின் நான்கு முக்குப் பகுதிகளும் கலாமின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. Children’s Square, Scientist Square, Motivation Square and Lecture Square என அவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. நினைவு மண்டபத்தில் முகப்புப் பகுதியில் அக்னி ஏவுகணையும் மற்றொரு பகுதியில் எஸ்.எல்.வி-3 ராக்கெட்டும் பிரமாண்டமாக எழுந்து நிற்கின்றன. கலாமின் இணையதளமான பில்லியன் பீட்ஸை நினைவுப்படுத்தும் வகையில் சுவர் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது.  கலாம் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் மண்டபம் முழுவதும் அலங்கரிக்கின்றன.

இரண்டாம் கட்டப் பணியில் மண்டபத்திற்கு சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் வசதி செய்யப்படவுள்ளது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close