Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திடீர் களத்தில் இறங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்..! ஆச்சர்யத்தில் பொதுமக்கள்

chennai commisioner

சென்னை மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் இன்று நூற்றுக்கணக்கான காவலர்களுடன் இணைந்து சுத்தப்படுத்தினார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

சென்னை மாநகர மக்கள் தற்போது தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். இரண்டு நாளைக்கு ஒரு தடவை மக்களுக்கு குடிநீர்வாரியம் சார்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பல்லாவரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சென்னை மக்களுக்குத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கல்குவாரிகளில் தண்ணீர் வற்றிவிட்டதால் தற்போது, சென்னை போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏரியிலிருந்து பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டாலும் ஏரியைச் சுற்றி பிளாஸ்டிக் பொருள்கள், கழிவுப் பொருள்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதைச் சுத்தப்படுத்தும் பணியை சென்னை வடக்குக் கூடுதல் ஆணையர் ஜெயராம் இன்று தொடங்கிவைத்தார். மாணவர்கள், காவலர்கள், தன்னார்வ அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் ஏரியைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் களத்தில் இறங்கி ஏரியைச் சுற்றிக்கிடந்த கழிவுப் பொருள்களைச் சுத்தம் செய்தார். இதைப்பார்த்து பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.

chennai commisioner

இது குறித்து காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை மக்களுக்குத் தற்போது குடிநீர் ஆதாரமாக போரூர் ஏரி இருந்து வருகிறது. ஏரியைச் சுற்றி கழிவுப் பொருள்கள் அதிகம் கிடக்கிறது. இதனால் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருள்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close