Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கே ஜெயானந்த்? தீவிரத் தேடுதலில் சசிகலா குடும்பம்

ஜெயானந்த்

சசிகலா சிறை சென்ற பிறகு திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையேயான பனிப்போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திவாகரனின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலெட்சுமி மரணம், இருவரையும் ஒன்று சேர வைத்திருக்கிறது. கடந்த 27-ம் தேதி மரணமடைந்த சந்தானலெட்சுமி உடல் 28-ம் தேதி தஞ்சாவூர் காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. சசிகலா உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டிருந்தனர். உறவினர்கள் தவிர, திவாகரன் ஆதரவாளர்கள், தினகரன் ஆதரவாளர்கள் என, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆனால், திவாகரன் மகன் ஜெயானந்த் மட்டும் துக்கத்துக்கு வரவில்லை என்கிறார்கள் சசிகலாவின் உறவினர்கள். சந்தானலெட்சுமி ஜெயானந்த்துக்கு சொந்த பெரியம்மா, சசிகலாவின் உறவினர்கள் ஒன்றோடு ஒன்றாக உறவாடிக்கொண்டிருந்த வேலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் சம்பிரதாய முறைப்படிகூட வரவில்லை என்கிறார்கள். துக்கத்துக்கு ஜெயானந்த் வராதது ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

ஜெயானந்த் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''மன்னார்குடியில் திவாகரன் தலைமையில் போடப்பட்ட கூட்டத்தைத் தடுத்து நிறுத்தியவர்தான் தினகரன். ஆனால், இன்று எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது ஜெயானந்த்துக்கு சந்தோஷமான விசயம்தான். ஆனால் அவர், அவசரம் அவசரமாக டெல்லி சென்றிருக்கிறார். ஜெயானந்த் டெல்லி சென்றதன் பின்னணி என்ன என்பதுதான் குடும்ப உறவுகளிடையே பேச்சு கிளம்பியிருக்கிறது. இன்னும் சிலரோ, டெல்லி வேலையை முடித்துவிட்டு, விரைவில் தமிழகம் திரும்பும் ஜெயானந்த், தஞ்சை காந்தி நகரில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு வருவார், உறவுகளின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பார்'' என்கிறார்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close