Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாஃபியாக்களின் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன'- கிரண்பேடி அதிரடி

புதுச்சேரியில், ஏழு தனியார் கல்லூரிகளில் முறைகேடாகச் சேர்ந்த 95 மாணவர்களின் அனுமதியை ரத்துசெய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இதையடுத்து, ”எம்.சி.ஐ-யின் நடவடிக்கையால் மாஃபியாக்களின் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன” என்று ஆளுநர் கிரண்பேடி அதிரடியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரி முதுநிலை மருத்துவச் சேர்க்கையில், பல முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து குற்றம்சுமத்தினார். மேலும், சென்டாக் கலந்தாய்வுமூலம் தேர்வுசெய்யப்படாத 95 மாணவர்கள் அதிக நிதி கொடுத்து ஏழு தனியார் கல்லூரிகளில் முறைகேடாகச் சேர்ந்துள்ளனர் என்று பெற்றோர்-மாணவர்கள் தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு போன்றவற்றிடம் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தார் ஆளுநர் கிரண்பேடி. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மறுத்த புதுச்சேரி அரசு சென்டாக் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்றது எனக் கூறி வந்தது.

சென்டாக்

இதற்கிடையில், சென்டாக்கில் தேர்வான மாணவர்களின் பட்டியல், கல்லூரி நிர்வாகங்களின் சேர்க்கை பட்டியலை வைத்து அதிரடியாக விசாரணையில் குதித்தது எம்.சி.ஐ. இது தொடர்பாக மேலும் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்  உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முறைகேடாக சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட 95 பேரை விடுவிக்க எம்.சி.ஐ உத்தரவிட்டுள்ளது. 

 

இதுகுறித்து கிரண்பேடி சமூக வலைதளத்தில், “மருத்துவக் கல்லூரிகளில் சட்ட விரோதமாகவும் முறைகேடாகவும் நியமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்த நடவடிக்கை ”சர்ஜிக்கல் ஆபரேஷன்” போன்றது. இந்த நடவடிக்கையால் மாஃபியாக்களின் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, வெளிப்படைத்தன்மை, நேர்மையாக மாணவர் சேர்க்கை  நடைபெற வசதியாக `சென்டாக்’ அமைப்பை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். இதற்காக அடுத்த ஆண்டு முதல் கர்நாடகாவைப் போன்று மின்னணு முறையில் கலந்தாய்வு நடபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை செயலர் நரேந்திரகுமார், சென்டாக் இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோர் உறுதி செய்வார்கள். மருத்துவ கவுன்சில், பொதுநல வழக்கறிஞர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் போன்றவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாகக் கொள்ளைக் கூட்டம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. குறிப்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பொருளாதார ரீதியாகப் பல இழப்புகளையும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் சந்தித்தபின் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close