Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துறையூர், கொல்லிமலை புளியஞ்சோலையில் ஆகஸ்ட் - 3 சித்தர் குருபூஜை விழா !

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சைப்பெருமாள்பட்டி அருகிலிருக்கும் கொல்லிமலை புளியஞ்சோலை, சித்தர்கள் வாழும் பூமியாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கொல்லிமலை இருஞானிகளின் குருபூஜை விழா நடப்பது வழக்கம். இதில் தமிழகம் முழுவதுமுள்ள ஆன்மிக அன்பர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்.  

புளியஞ்சோலை

ஆன்மிகத்தில் ஈடுபடும் ஒருவருக்கு வழிகாட்டியாக ஒரு குருநாதர் இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி குருநாதரை நாம் பின்பற்றிப் போனால், நாம் இறைவனை அடைவது எளிதாகும். அந்த வகையில் நம் தமிழகத்தில் சித்தர்கள் பலர் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு வாழ்வியலோடு ஆன்மிகத்திலும் உய்ய நிலையை அடைந்திட பாடுபட்டுள்ளனர். அப்படிப்பட்ட சித்தர்களை நினைவிலேந்தி வழிபாடு செய்யும்விதமாக இந்த குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதேபோல் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி (வியாழக்கிழமை) சித்தர்கள் குரு பூஜை விழாவும் அன்னதானமும் நடைபெறுகிறது. விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் சே.கருணாஸ்  தலைமை தாங்குகிறார். காலை 5.00 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கும் விழாவில், சிவலிங்க பூஜை, சங்குபூஜை, திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மிக அன்பர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close