Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமராவதி ஆற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறக்க கோரிக்கை

 போராடும் மக்கள்

குடிநீருக்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும். இல்லை என்றால், கடைமடையான கரூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்" என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள். வரலாறு காணாத வறட்சி, இந்த வருடமும் உரிய காலத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் சுண்ணாம்பு மண் நிறைந்த பூமி என்பதால், குடிநீர் கிடைக்காமல் மாவட்டம் முழுக்க உள்ள மக்கள், நாடு தேடி அலைந்த கொலம்பஸ் போல, குடிநீர் தேடி காலிக்குடங்களோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள், ஆங்காங்கே குடிநீருக்கு ஏற்பாடுசெய்யச்சொல்லி சாலை மறியல் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். இந்நிலையில், அமராவதி அணையிலிருந்து வரும் அமராவதி ஆற்றில், 450 கன அடி தண்ணீரை பாசனத்துக்காக அதிகாரிகள் திறக்க இருக்கும் நிலையில்,"குடிநீருக்காக அமராவதி தண்ணீர் திறக்கணும், இல்லைனா போராட்டம் வெடிக்கும்" என்று சூளுரைத்திருக்கிறார் ராமசாமி.

பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அவர், தனது சங்க நிர்வாகிகளோடு போய் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“முன்னாள் அமைச்சர் சண்முகவேல் ஐநூறு பேரை திரட்டிக்கொண்டு போய், அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கிடா வெட்டி தோப்பில் விருந்துவைத்து அமராவதி பிரதான ஆற்றில் விவசாயத்துக்காக 450 கன அடி தண்ணீர் திறக்கவைத்திருக்கிறார். ஆனால், குடிநீருக்காக கடைமடை கரூர் வரை வரும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கர்நாடகம் நம்மை வஞ்சிப்பதாகக் கொக்கரிக்கிறோம்.

ஆனால், இங்கேகூட அந்தத் தண்ணீர் விவகாரத்தில் பிரித்தாளும் நிலைதான் இருக்கு. இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ஆண்டான்கோயில் கிழக்கில் 40 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், அனைவரும் குடிதண்ணீரின்றி அல்லல்படுகிறார்கள். இதற்காகவாவது, அமைச்சர் தண்ணீர் திறக்க உதவலை. முதலில் குடிநீருக்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயத்துக்கு தண்ணீரை பிற்பாடு திறக்கலாம். அதை உடனடியா செய்யலன்னா,கரூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close