Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புண்ணியம் என்பதால் மு.க.ஸ்டாலின் கோயில் குளங்களை தூர் வாருகிறார்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல்

குளங்களை தூர்வாரினால் புண்ணியம் என்று யாராவது கூறியிருப்பார்கள். அதனால் தான் அவர் கோயில் குளங்களை தூர்வாருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேலி செய்தார். 


தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று, திருவண்ணாமலையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'குழந்தைகள் வறுமையால் வாடக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். அவர், காவிரிப் பிரச்னையை சிறப்பாகக் கையாண்டார். கிராமங்களில், வீட்டுக்கு ஒரு விளக்கு திட்டத்தைக் கொண்டுவந்தார்; கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்; விவசாயிகளுக்கு சிறப்பான திட்டத்தைக் கொண்டுவந்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றினார். எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில்தான், 11 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கும் அவரது திரைப்படத்துக்கும் வித்தியாசம் இருக்காது. ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தின் மாண்பைக் காக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்துவருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. பல ஆண்டுகளாக வற்றிக் கிடக்கும் குளங்களை மு.க.ஸ்டாலின் தூர்வாரி வருகிறார். தூர்வாரினால் புண்ணியம் என்று யாரேனும் கூறி இருப்பார்கள் அதனால் அவர் தூர்வாரி வருகிறார். ஜெயலலிதாவின் ராணுவக் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் அ.தி.மு.க. பல தியாகங்களை செய்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டிக்காத்துள்ளார். ' என்றார். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close