Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘போதைப்பொருள்கள் விற்பனை தமிழகத்தில் அமோகம்’ - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின்  மண்டல அளவிலான மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மதுரையில் இன்று  நடைபெற்றது.  செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலத்தலைவர் தெகலான் பாகவி, ''தமிழகம் முழுவதும் இளைஞர்களையும், மாணவர்களையும் குறிவைத்து போதைப்பொருள் விற்கும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்துவருகின்றன. தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருள்கள் கடைகளில் கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது” என்றார்.

தெகலான் பாகவி

மேலும் அவர் கூறுகையில், ’குறிப்பாக, மதுரையில் போதைப்பொருள்கள் தாராளமாக விற்பனையாகின்றன' என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள்கள் விற்பனையை முழுவதுமாகக் கட்டுப்படுத்த, விற்பனையாளர்கள்மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

குட்கா, பான்மசாலா

போதைப்பொருள்களை விற்பனைசெய்வோர் மற்றும் உற்பத்திசெய்வோரை மிகக் கடுமையான சட்டங்களால் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக கவனம் செலுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close