Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவக் கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும்..! ஆட்சியரிடம் மனு

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை விரைவில் நடத்தவேண்டும் என்று கரூர் மாவட்டத்தைச் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 


மருத்துவக் கலந்தாய்வு விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், 'நாங்கள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மிகவும் பின்தங்கியுள்ள குடும்ப சூழலைக் கொண்டவர்கள். கஷ்டப்பட்டு படித்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு படித்து, ஆயிரத்து நூறுக்கு மேல் மார்க் எடுத்தோம். ஆனால் கடந்த வருடம் மருத்துவ படிப்பில் சீட் கிடைக்கவில்லை. 

இந்த வருடம் கட் ஆஃப் மார்க் சிஸ்டம் போய், நீட் தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வந்ததால், ஒரு வருடம் காத்திருந்து இப்போது நீட் தேர்வை எழுதினோம். அதிலும் நல்ல மார்க்கை எடுத்துள்ளோம். ஆனால் கலந்தாய்வை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள். இதனால் இந்த வருடமும் எங்களால் மருத்துவ படிப்பில் சேர முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இனியும் காலம் கடத்தினால் எங்கள் படிப்பு பாழாகும். அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை. அதனால்,அதிகாரிகளை பார்த்து மனு கொடுத்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் எங்கள் மருத்துவ படிப்புக்கு விடிவு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு போய் எங்களுக்கு வழிவகை செய்யவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close