Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே டிரான்ஸ்பார்மரில் தீவிபத்து; நோயாளிகள் அவதி

சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ட்ரான்ஸ்பார்மரில் தீவிபத்து ஏற்பட்டது. 

fire accident in chennai

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள ட்ரான்ஸ்பார்மரில் சரியாக 10.50 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் தீடீர்ரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து  20 நிமிடங்களில் தீயை அணைத்தனர். 

அரசு மருத்துவமனை முன்பு உள்ள மின்மாற்றியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமல்  நோயாளிகள் பரிதவித்தனர்.108 அவசர சிகிச்சை ஊர்திகளில் கொண்டு வரப்பட்டவர்களும் போன் டார்ச் வெளிச்சத்துடன் உள்ளே கொண்டு செல்லப்பட்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்பு ஜெனேரட்டர் உதவிவுடன் மின்சாரம் வழங்கப்பட்டது. 
 படங்கள்:  ஜெ.வேங்கடராஜ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close