Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பகவத் கீதை சர்ச்சை: அப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள் வைப்பு!

அப்துல் கலாம் சிலை அருகே குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டுள்ளது. 

அப்துல் கலாம் சிலை

கடந்த 2015-ம்  ஆண்டு ஜூலை 27-ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருந்தபோது உயிர் பிரிந்தது. அவரது உடல்,  மூன்று நாள்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு என்னுமிடத்தில் அடக்கம்செய்யப்பட்டது. கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. 


இதை கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே, அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, எதற்காக பகவத் கீதையை மட்டும் வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், அப்துல் கலாம் சிலை அருகே இன்று காலை பைபிள் மற்றும் குரான் வைக்கப்பட்டுள்ளது. பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close