Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பன்னீர்செல்வம் எங்கள் பங்காளி' : திவாகரன் திடீர் பாசம்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் என்று தற்போது மூன்று அணிகளாக அ.தி.மு.க இயங்கி வருகிறது. தினகரனுக்கு 36 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

திவாகரன்


அவரது அணியில் முதல் ஆளாக சேர்ந்த, கோவை கவுண்டன்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, தற்போது முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார். இதனிடையே எதிரும், புதிருமாக இருந்து வந்த சசிகலாவின் தம்பி திவாரகன் மற்றும் டி.டி.வி தினகரன்  ஆகியோர் இணைந்துள்ளனர்.


சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லட்சுமி உயிரிழந்ததையடுத்து, அவரது துக்க நிகழ்வில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டனர். கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். இந்நிலையில் திவாகரன் செய்தியாளர்களிடம், "அ.தி.மு.க-வை விட்டு யாரும் வெளியேறவில்லை. பன்னீர்செல்வம் ஒன்றும் எதிர்க்கட்சி கிடையாது. அவர் எங்களது பங்காளிதான். பிரிந்து சென்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்துள்ளனர்.  பன்னீர்செல்வமும் விரைவில் எங்களது அணியில் இணைவார்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close