Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் செயல்வீரர்கள் கூட்டம்: மாஸ் காட்டிய ஓ.பி.எஸ்!

ஓ.பி.எஸ் அணி கோவையில் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாஓ.பி.எஸ் அணி கோவையில் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று கோவையில் செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பி.எஸ் அணி நடத்தியது. ஓ.பி.எஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது என்று சொல்லப்பட்டு வரும் சூழலில், செயல்வீரர்கள் கூட்டத்தை மாநாடு போல நடத்தி மாஸ் காட்டியிருக்கிறது ஓ.பி.எஸ் அணி.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி அணியும் தனித்தனியாக கொண்டாடி வருகிறார்கள். இருவரில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் போட்டியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா கொண்டாட்டம் முன்னிறுத்தப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஓ.பி.எஸ்ஸோடு போட்டிப்போடுகிறது. எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்று மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ் போட்டிபோடுகிறார். எடப்பாடி அணியினர் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு குறைந்துவிட்டது என்றே பேசிவந்தனர். இந்நிலையில் நேற்று கோவை கொடிசியா மைதானத்தில்  ஓ.பி.எஸ் அணி நடத்திய கூட்டத்துக்கு கூட்டம் அதிகளவிலேயே கூடியது.

’ஜல்லிக்கட்டு நாயகனே’, ’தர்மயுத்தத்தின் தலைவனே’ என்று வழியெங்கும் பேனர்கள் பளபளத்தன. நுழைவாயில் தோரணங்கள், செண்டைமேளம், தப்பாட்டம் என ஓ.பி.எஸ்-க்கான வரவேற்பு உச்சகட்டம். கூட்டத்தின் ஆர்ப்பரிப்பில் மைக் பிடித்த ஓ.பி.எஸ். ’இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். அ.தி.மு.க-வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள்  பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா.? அங்கு இருப்பவர்கள் பெட்டிக்காக  மட்டுமே இருக்கிறார்கள். இங்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.கவில் இரண்டு அணிகளெல்லாம் இல்லை. இந்த ஒரே அணிதான். ஆட்சி  கலைந்து தேர்தல் என்று வந்தால் தெரியும் மக்கள் யார் பக்கம் இருக்கிறாகள்’ என்று ஆவேசமாகப் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close