Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளிர் சுய உதவிக்குழு நடத்தினால் பணம் கொட்டும்... தேனியை குறிவைக்கும் மோசடி கும்பல்!

தேனி மாவட்டம் கோவிந்தாநகரம் பகுதியில் வசிப்பவர் புருசோத்தமன். இவரை போடேந்திபுரம் பகுதியைச் சேர்ந்த லதா மற்றும் ரேவந்த் பாண்டியன் ஆகிய இருவர் அணுகி, தாங்கள் தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்திவருவதாகவும், இதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து பணம் நிறைய கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். நீங்களும் தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு நடத்தினால் வெளி நாடுகளில் இருந்து பணம் அதிகமாக கிடைக்கும் என்றும் தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் சொன்னதை நம்பிய புருசோத்தமன், முதல்கட்டமாக 5 லட்சமும், அடுத்ததாக மீதிப் பணத்தையும் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட இருவரும் தொண்டு நிறுவனம் வைத்துக்கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். பணத்தை திருப்பிக்கேட்ட புருசோத்தமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனு கொடுத்துள்ளார் புருசோத்தமன். புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரேவந்த் பாண்டியனை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள லதாவைத் தேடி வருகின்றனர். இந்த கும்பல் இன்னும் பல பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்திருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேனியை குறிவைக்கும் இந்த கும்பலுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்தி வரும் சில நல்ல உள்ளங்களுக்கு மத்தியில், வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு பலரை ஏமாற்றும் கும்பலும் உலாவருவதைத் தடுக்க முடியவில்லை. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close